பொங்கல் பரிசுத் தொகுப்பு: நியாய விலைக் கடைகள் 11-இல் செயல்படும்
நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடுபொங்கல் பரிசுத் தொகுப்பு: நியாய விலைக் கடைகள் 11-இல் செயல்படும்
நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாகும். இதற்குப் பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகள் செயல்படும். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.