தமிழ்நாடு

டாபே நிறுவனம் சார்பில் விவசாய பணிக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள்

DIN

அரசு மற்றும் டாபே நிறுவனமும் இணைந்து சிறு மற்றும் குறு விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வேளாண் இயந்திரங்களை பதிவு செய்து வாடகையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால், கரோனா நடவடிக்கையால் விவசாயிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட கூடாது. இதற்காக விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள், விவசாய இயந்திரங்கள், வாடகை இயந்திர மையங்கள் ஆகியவைகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வாடகையின்றி வேளாண் இயந்திரம்....: இதன் அடிப்படையில் மாநில அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜே.பார்ம் இணைந்து மாúஸ பெர்குஷன் மற்றும் எய்சர் டிராக்டர்கள், வேளாண் இயந்திரங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாள்கள் வாடகையின்றி விவசாயிகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள வழங்கப்பட இருக்கிறது. எனவே டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சேவை மைய தொடர்புக்கு.... : இதற்கு உழவன் செயலியில் பதிவு செய்யும் போது வேளாண் இயந்திர வாடகை சேவையின் மூலம் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரம் தேவைப்படும் நேரம், நாள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்பு மையமான டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தின் 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரம் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு பதிவு செய்யலாம். 

அதேபோல், ஜெ.பார்ம் கள அலுவலர்களையும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். அதனால், சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு முறையில் பதிவு செய்து டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை பதிவு செய்ததோடு, அதற்கு வாடகை கட்டணமின்றி விவசாய பணிகளை மேற்கொண்டு பயன்பெறலாம். மேலும், இதுதொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT