தமிழ்நாடு

சித்திரைத் திருவிழா ரத்து: மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய சித்திரைத் திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

DIN

ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய சித்திரைத் திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். இவ்விழாவின் போது வைகை ஆற்றில் இறங்குவதற்காக வழிகளில் உள்ள அனைத்து மண்டகப்படிகளிலும் சுவாமி எழுந்தருள்வாா். 

தற்போது கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் வழக்கமாக ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க வேண்டிய சித்திரைத் திருவிழாவின் கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி மட்டும் கோயிலில் நடைபெறும் என்றும் இதைக் கோயில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கல்யாணம் நடைபெறும் மே 4ஆம் தேதி காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் பெண்கள் தங்கள் இல்லத்திலேயே புதிய மங்கலநாணை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT