தமிழ்நாடு

கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை: முதல்வர் உத்தரவு

DIN

கரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை நாளை முதல் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தன்னலம் கருதாது களப்பணியாற்றுகின்ற, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கத் தேவையான முகக் கவசங்களும், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 

தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றிவரும் மேற்கண்ட அனைத்துத் துறை களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஜிங்க் மாத்திரைகளும், மல்டி வைட்டமின் மாத்திரைகளும் நாளை (27.4.2020) முதல் 10 நாட்களுக்கு அம்மாவின் அரசால் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT