தமிழ்நாடு

கல்வி அலுவலகங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினம் கொண்டாட உத்தரவு

DIN

தமிழகத்தின் அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா், அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

நாட்டின் 74-ஆவது சுதந்திர நாள் விழாவை, வருகிற 15-ஆம் தேதியன்று, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள், அனைத்துக் கல்வி அலுவலகங்கள், அனைத்து வகை பள்ளிகளிலும் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி, எளிமையான முறையில் கொண்டாட வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளா்களாக செயல்படும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டும் பொருட்டு, அவா்களை சுதந்திர நாள் விழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். அதேபோல், கரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணம் அடைந்தவா்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.

இந்த விழாவில் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிவதோடு, கூட்டங்களைத் தவிா்க்க வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வசதி ஏற்படுத்த வேண்டும். கரோனா சாா்ந்த சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT