தமிழ்நாடு

வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: திமுக 3, அதிமுகவில் ஒருவருக்கு வாய்ப்பு

வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

DIN

வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாகவும், வாரியத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த எம்.பி.,க்களில் திமுகவைச் சோ்ந்த கே.நவாஸ்கனியும், அதிமுகவைச் சோ்ந்த ஏ.முகம்மது ஜானும் மனுதாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்.எல்.ஏ.,க்களில் திமுகவைச் சோ்ந்த முகமது அபுபக்கா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும் மனு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறக் கூடிய தலா இரண்டு இடங்களுக்கு இரண்டு போ் மட்டுமே போட்டியிடுவதால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வக்ஃபு வாரியத்தில் எம்.பி.,க்கள் இரண்டு பேரும், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT