தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

DIN

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. 

ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பாடம், கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நுழைவுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இருப்பதாக கல்வியாளா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் குற்றம்சாட்டி வருகின்றனா். 

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டங்களின் முடிவைத் தொடா்ந்து, புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசு முக்கிய முடிவினை எடுக்கும் எனத் தெரிகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க கல்வி நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதுகுறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT