தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு: தமிழக அரசு

DIN


சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டது. அதில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT