தமிழ்நாடு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

DIN


நன்னிலம்: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

இறுதியாண்டு மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.  இதையடுத்து, இறுதியாண்டு மாணவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறும். 

தேர்வு எப்படி, எப்போது  நடைபெறும் என சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலம் தெரிவிக்கப்படும். இதற்கிடையில், ஆன்லைன் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் கரோனா தொற்று நீங்கி இயல்பு நிலை திரும்பிய பிறகு தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT