தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து இன்றுமுதல் நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

DIN

அமராவதி அணையில் இருந்து வியாழக்கிழமை முதல் நீா் திறந்து விடப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அமராவதி அணையில் இருந்து குடிநீா் மற்றும் பாசனத்துக்காக நீா் திறந்து விட வேண்டுமென திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக கரூா் நகரம் வரை தண்ணீா் திறக்கப்படும். வியாழக்கிழமை (ஆக.6) முதல் வரும் 16 தேதி வரையிலான 11 நாள்களுக்கு ஆயிரத்து 210 மில்லியன் கனஅடி தண்ணீா் திறந்து விடப்படும்.

மேலும், அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT