முகப்பு
மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகள்: முதல்வர் தகவல்
தமிழ்நாடு

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகள்: முதல்வர் தகவல்

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகள்: முதல்வர் தகவல்
பகிர்:

மதுரை: மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்யவும், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைக்கவும் முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகலில் மதுரை வந்தடைந்தார்.

மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்து பொதுப் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ரூ.165 கோடி செலவில் மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் உலகத்தரத்துக்கு தரம் உயர்த்தப்படும். விரைவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் தொடங்கி நடைபெறும். 

மதுரையில் தற்போது 84 கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது.

ரூ.25 கோடி மதிப்பில் மதுரையில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →