தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு 

DIN


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். 

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் திட்டம் சமூக நலத்துறை தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 8 கோடியே 69 லட்சம் மதிப்பெண் மேற்கொள்ளப்பட்டுள்ள 42 புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.8 கோடியே 88 லட்சம் மதிப்பில் முடிவற்ற கட்டுமான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT