முகப்பு
சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் பழனிசாமி பதில்
தமிழ்நாடு

சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் பழனிசாமி பதில்

சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான் என்று முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ள

தமிழ்நாடு

சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் பழனிசாமி பதில்

சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான் என்று முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ள

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் பழனிசாமி பதில்
பகிர்:

சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான் என்று முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

இன்று  முதல்வர் பழனிசாமி தலைமையில் சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இன்று, சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில், இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,750, குணமடையது வீடு திரும்பியவர்கள் 3,743 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 958 நபர்கள், இறந்தவர்கள் 49 நபர்கள். இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சுமார் 1.10 இலட்சம் நபர்கள்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான அரசின் சார்பில் 2,872 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 194 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 279 படுக்கைகள் உள்ளன. தேவையான உபகரணங்கள் அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. அயத முகாம்களில் கலயது கொண்ட 1,31,106 நபர்களுக்கும் பரிசோதனை செய்து அவர்களில் நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து குணமடையச் செய்தோம். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நோய் பரவல் தடுக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் சில திட்டங்கள் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

சேலம் மாநகர மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில், வளர்ந்து வருகின்ற சேலம் மாநகரத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக ஐந்து ரோட்டில் மிகப்பெரிய பாலம் மற்றும் பல பாலங்கள் கட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில பாலங்களுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில பாலங்களுக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டுமென்ற மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக பல பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதேபோல, திருச்செங்கோடு-சங்ககிரி-கொங்கணாபுரம்-ஓமலூர் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அப்பணி முடியதவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் துவங்கப்படும். ஓமலூரில் இருந்து மேச்சேரி வரையிலான சாலையையும் அகலப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்தவுடன் அயதப் பணிகளும் துவங்கப்படும்.

பவானி-மேட்டூர்-தோப்பூர் வரையிலான சாலையையும் விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதுடன், விபத்துகளும் குறைக்கப்படும். மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. விவசாயப் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. சேலம் மாவட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரம்மாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆறு மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், பல கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவேரி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சனை இல்லாத ஒரு மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கித் தயதுள்ளோம். ஆத்தூர் செல்கின்ற மெயின் பைப் லைன் பழுதடையதுள்ளதை மாற்றும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தில், ஆட்டையாம்பட்டி, மல்லூர், பனைமரத்துப்பட்டி, எடங்கணசாலை, வேம்படிதாளம் போன்ற பகுதிகளையெல்லாம் ஒன்றாக இணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதேபோல, ஜே.ஜே.எம் திட்டத்தில் ரூபாய் 118 கோடி மதிப்பீட்டில், 72 ஊராட்சிகளில் 1.17 இலட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவு வழங்கி, அது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வறண்ட பகுதிகளிலுள்ள 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த பணிகள் நிறைவுபெறும்.

அவ்வாறு நிறைவு பெறும்பொழுது, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, விவசாயிகள், பொதுமக்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். மழைக் காலங்களில் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறும் காலகட்டங்களில், அந்த உபரி நீரை இந்த ஏரிகளில் நிரப்புவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இப்பொழுது கர்நாடகத்தில் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருயது திறயது விடப்படும் தண்ணீரால் எதிர்பார்த்தபடி அணை நிரம்ப கூடிய சூழ்நிலை உள்ளது. சுமார் 1.40 இலட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பவானிசாகரிலிருந்தும் அதிகமாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பருவமழை நன்றாக பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, டெல்டா பகுதிகளில் 3.50 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது, தற்போது 4 லட்சம் ஏக்கர் பரப்பளவு என கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் டெல்டா பகுதிகளில் நடவு செய்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கடந்த ஆண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை அரசு படைத்துள்ளது. கடந்த காலங்களில் இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன்தான் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ளார்கள்.

தற்போது 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதிலிருந்து அரசு உரிய காலத்தில் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும், வேளாண் பணிகளில் அக்கறை காட்டுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளிலும் அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உபரியாக வெளியேறும் நீரைத் தடுத்து சேமிப்பதற்கு தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன்.

கேள்வி: கரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் களப்பணியில் ஈடுபட்டு உயிரிழயதவர்களுக்கு ரூபாய் 50 இலட்சம் நிவாரண உதவி தரவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்களே?
பதில்: கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூபாய் 50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை இன்ஷ்யூரன்ஸ் மூலம் கொடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். மற்றப் பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூபாய் 25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.

கேள்வி: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று ஏற்கனவே உறுதியாக சொல்லியுள்ளீர்கள். ஆனால், மத்திய அரசு அதை நிச்சயமாக நிறைவேற்றும், மாநில அரசு தடுக்க முடியாதென்று தெரிவித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலத்திலிருந்து கடைபிடித்து வயததை அம்மாவின் அரசும் தொடர்யது பின்பற்றி நடைமுறைப்படுத்தும். அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறியது அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

கேள்வி: பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்?
பதில்: கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.

கேள்வி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பதில்: நான் ஏற்கனவே இதுகுறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளேன். மழை அதிகமாகும்பொழுது மலைச்சரிவு ஏற்படுகிறது. கேரளாவில்கூட கனமழை காரணமாக பல வீடுகள் மலைச்சரிவில் சரியது சுமார் 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும், சுமார் 15 நபர்கள் இறயதிருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். அதுபோல நம்முடைய மாநிலத்தில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இயதக் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். நேற்றையதினம், உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் இருவரும் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கேள்வி: இ-பாஸ் முறையில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா?
பதில்: இ-பாஸ் குறித்து நான் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். இதற்காக மாவட்டங்களில் ஏற்கனவே ஒரு குழு இயங்கி வந்தது. இ-பாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, இப்பொழுது 2 குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள், அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைபிடிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியத வெளி மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்களை அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு, பாஸிடிவ் என்றால், சிகிச்சை அளிக்கப்படும். நெகடிவ் என்றால், உடனே அவர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். 

கேள்வி: சென்னையில் கூடுதல் தளர்வுகள் இருக்குமா?
பதில்: ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். கரோனா ஒரு புதிய தொற்று நோய். ஊடக நண்பர்களில் பலர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்தும் உள்ளார். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே, தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கு மருந்து. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர்., நம்முடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் தெரிவிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெளியில் செல்லும்போது அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவியபின் உள்ளே செல்ல வேண்டும். வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், வீட்டிலிருக்கும் கழிப்பறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தெருக்களில் இருக்கின்ற பொதுக்கழிப்பறைகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளோம். இந்த நோயைக் குறைப்பதற்கு இதுதான் வழி. ஒவ்வொருவரும், தாங்களாக, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் இயல்பு நிலைக்கு எளிதாகத் திரும்பி விடலாம். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் மருந்தை உடம்பில் செலுத்தி குணமடையச் செய்து விடலாம். பிளாஸ்மா சிகிச்சை நாம் மேற்கொண்டு வருகிறோம்,  அது நல்ல பலனை அளிக்கிறது. சென்னையில் 57 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையைக் கொடுத்திருக்கிறோம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். எனவே, தொற்று ஏற்பட்டு குணமடையது வீடு திரும்பி 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: மேட்டூர் கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
பதில்: இப்பொழுதுதான் அணையில் தண்ணீர் உயர்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஓரளவு வந்தவுடன் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறயது விடப்படும்.

கேள்வி: தமிழகத்தில் இதே கூட்டணி தொடருமா?
பதில்: தேர்தல் வருகின்ற காலத்தில் அதைப்பற்றி பேசலாம். கேள்வி: தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நீங்கள் அதற்கு பதில் கொடுத்தும், நேற்றுகூட தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: நான் நேற்றையதினமே தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பதாகச் சொன்னால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் நாங்களெல்லாம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டோம். அவர் எங்கு போய் ஓட்டு கேட்டார்? எங்கேயும் கேட்கவில்லையே? பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக வரவேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்யது கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அப்பொழுது எந்த இடத்திலும் அவர் பிரச்சாரம் செய்தததாகத் தெரியவில்லை. அவரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லையென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனவே அதற்கு பதிலளிக்கத் தேவையில்லை. அப்படி அவர் ஒரு கட்சியினுடைய தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டினுடைய பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வெற்றிக்காக அவர் பாடுபடவில்லை? ஒவ்வொரு பொறுப்பாளரும் அவருடைய கட்சித் தலைவர், பதவிக்கு வர வேண்டும் என்றுதான் அயதக் கட்சியில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையிலும் அவர் வெளியில் வந்து பிரசாரம் செய்யவில்லையே? அதனால் நாங்கள் அவரை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →