தமிழ்நாடு

சென்னை: அம்பத்தூர், கோடம்பாக்கத்தில் கட்டுப்படாத கரோனா

DIN

கடந்த சில மாதங்களாக சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் இருந்தே மெல்ல கட்டுப்பட்டுள்ளது. எனினும், அம்பத்தூர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தே வருகிறது.

ஒட்டுமொத்தமாக சென்னையில் 11,654 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அம்பத்தூரில் 1506 பேரும், கோடம்பாக்கத்தில் 1417 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 989 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,09,177- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 2,302 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும் அதிகரித்தது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அண்மையில் எட்டியது.

989 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,177-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 95,161 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 11,654 போ் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை இறப்பு எண்ணிக்கை 2,302- ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT