தமிழ்நாடு

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி வசந்தகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இருப்பவர் வசந்த குமார். இவரது நேர்முக உதவியாளர் போத்திராஜுக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதைத்தொடர்ந்து வசந்த குமார் எம்பி மற்றும் அவரது மனைவிக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் திங்கள்கிழமை இரவு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வசந்த குமார் எம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வசந்தகுமாரையும் சேர்ந்து தமிழகத்தில் இதுவரை 4 எம்பிக்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், நாகை மக்களவைத் தொகுதி எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எம்.பி. ராமலிங்கம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT