தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் இன்று உத்தரவிட்டுள்ளார்.

DIN


தமிழக காவல்துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு : 

1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன் ஐபிஎஸ் சென்னை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சென்னை சைபர் குற்றப் பிரிவு எஸ்பி-2 ஆக இருந்த ஓம்பிரகாஷ் மீனா ஐபிஎஸ், சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ், சென்னை, சிபிசிஐடி - சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. சென்னை, சிபிசிஐடி - சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஏ. ஜெயலட்சுமி ஐபிஎஸ், தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

7.  சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கண்ணம்மாள், சென்னை மாநகர - மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர் - 2 ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை மாநகர - மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர் - 2 ஆக இருந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த நிஷா, சென்னை சைபர் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் - 2 ஆக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT