தமிழ்நாடு

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பிளாஸ்மா வங்கிகள்: விஜயபாஸ்கர்

ANI

சென்னை: நாட்டிலேயே அதிக பிளாஸ்மா வங்கிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று, கரோனாவில் இருந்து மீண்ட 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் அளித்தனர். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை தமிழகத்தில் 76 பேரிடம் இருந்து பிளாஸ்மா தானமாகப் பெறப்பட்டுள்ளது. இன்று சென்னையில் கரோனாவில் இருந்து மீண்ட 40 காவலர்கள் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் 76 பேரிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவைக் கொண்டு கரோனா பாதித்து அபாயக்கட்டத்தில் இருந்த 89 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நாட்டிலேயே பிளாஸ்மா வங்கிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT