புதுக்கோட்டையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.25 கோடியில் ஏற்கெனவே கட்டப்பட்ட சிறுநீரக சிறப்புச் சிகிச்சை மையக் கட்டடம் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
மூன்று தளங்களில் 300 படுக்கைகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு முழுமையான ஆக்ஸிஜன் வசதி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வகையான நவீன மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இம்மையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். புதுக்கோட்டை சிறப்பு மைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி உள்ளிட்டோர் காணொலிக் காட்சியில் இணைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியார் மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, சித்த மருத்துவச் சிகிச்சை மையம் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே 2,700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.