தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

​தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கரோனா: மேலும் 127 பேர் பலி

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு 127 பேர் (அரசு மருத்துவமனை - 83, தனியார் மருத்துவமனை -44) பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் ஒரேநாளில் 5,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,72,251 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 71,343 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,40,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி மொத்தம் 135 கரோனா பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்கள் 62, தனியார் ஆய்வகங்கள் 73.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT