​தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கரோனா: மேலும் 125 பேர் பலி

​தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,196 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய அறிவிப்பில் மேலும் 125 பேர் (அரசு மருத்துவமனை -86, தனியார் மருத்துவமனை -39) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54.019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி 62 அரசு ஆய்வகங்கள், 73 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 135 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT