தூத்துக்குடி: குண்டுவீச்சில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடுதூத்துக்குடி: குண்டுவீச்சில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் இன்று (18.8.2020), மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர் எனவும், காவல் துறையினரைப் பார்த்த துரைமுத்து மற்றும் அவனது சகோதரன் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து, காவல் துறையினர் அவர்களைத் துரத்திப் பிடிக்க முற்பட்டனர்.
அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல் துறையினர் மீது வீசியதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் வந்த செய்தியை அறிந்து தமிழக முதல்வர் பழனிசாமி வேதனை அடைந்தார்.
அரசுப் பணி மேற்கொள்ளும் போது ஏற்பட்ட இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதல்வர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 50 லட்சம் ரூபாய் வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.