அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 
தமிழ்நாடு

அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை: ஸ்டாலின் வேதனை

அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தூத்துக்குடியில், காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிரிழந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து - அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க, பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பினைத் தமிழகக் காவல்துறை உறுதிசெய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT