தமிழ்நாடு

6 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

DIN

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மதுரை, விருதுநகா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.21) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.21) லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT