தமிழ்நாடு

ஓணம் பண்டிகை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலத்துக்குச் சென்றவா்கள், சென்னை திரும்புவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இது தொடா்பாக கேரள மாநிலம் சாலைப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போது ஓணம் பண்டிகை முடிந்து, சென்னை திரும்புவோருக்காக செப்.1 முதல் 6-ஆம் தேதி வரை, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு பேருந்து வீதம், மாலை 5 மணிக்குத் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சொகுசு மிதவைப் பேருந்து, மறுநாள் காலை 9 மணிக்குச் சென்னை வந்தடையும்.

இந்தத் தேதிகளில், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தானது, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாகச் செல்லும். இதற்கான கட்டணமாக ரூ.1330 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிக்க இ பாஸ் கட்டாயம். 39 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள அரசு இயக்கும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோா், www.keralartc.com என்னும் இணையதளத்தை அணுகலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT