முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் அறிவிப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

DIN

சென்னை: வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழுள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்புகளுக்கு வைகை அணையில் இருந்து நீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்தனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து நாளொன்றுக்கு 900 கன அடி வீதம், 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். வரும் திங்கள்கிழமை (ஆக. 31) முதல் நீா் திறந்து விடப்படும். இதனால், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT