தமிழ்நாடு

நிலப் பிரச்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

DIN

நிலப் பிரச்னை தொடர்பாக ஏசி மெக்கானிக் கணேசன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் 28ஆவது வார்டுக்கு உட்பட்ட சேவியர் காலணி பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இத்தொட்டி கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் அந்த இடம் தனக்கு சொந்தம் என மேலப்பாளையத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன்(46) என்பவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.  

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து கணேசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொடர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT