தமிழ்நாடு

பூம்புகாரில் பலத்த காற்று, மழையால் கடலில் மூழ்கிய விசைப் படகு

DIN


பூம்புகார்: நாகை மாவட்டம், பூம்புகாரில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கியது.

அண்மையில் வீசிய நிவர் புயல் காரணமாக சீர்காழி வட்டத்துக்கு உள்பட்ட பூம்புகார், வானகிரி கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும், அவர்களது விசைப் படகுகளை பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், பூம்புகார் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த காற்றால், வானகிரி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது விசைப் படகு கடலில் மூழ்கியது.

இதையடுத்து, இருகிராம மீனவர்களும் மூழ்கிய படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் அங்குச் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து வானகிரி மீனவ கிராம பொறுப்பாளர்கள் கூறுகையில், கனமழையால் மூழ்கிய விசைப் படகுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT