சென்னையில் கரோனா நிலவரம் மண்டல வாரியாக
சென்னையில் கடந்த வாரம் வரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 365 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகள
சென்னை: சென்னையில் கடந்த வாரம் வரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 365 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கடுத்த இடத்தில் அண்ணாநகரில் 386 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,702 ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,15,739 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,08,183 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,854 பேர் பலியாகியுள்ளனர். இது 1.79 சதவீதமாகும்.
கரோனா பாதித்தவர்களில் 59.86 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக இதுவரை கோடம்பாக்கத்தில் அதிகக் கரோனா நோயாளிகள் இருந்து வந்த நிலையில், இன்று அடையாறில் 404 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கடுத்த நிலையில் திருவிகநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..