முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா நிலவரம்: தொடர்ந்து 2% ஆக நீடிக்கும் நோயாளிகள் விகிதம்

சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
சென்னையில் கரோனா நிலவரம்: தொடர்ந்து 2% நீடிக்கும் நோயாளிகள் விகிதம்
பகிர்:

சென்னை: சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 3,584 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த வாரம் வரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 369 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கடுத்த இடத்தில் அண்ணாநகரில் 370 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,584 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,16,119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,08,678 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,857 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும். 

கரோனா பாதித்தவர்களில் 60.95 சதவீதம் பேர் ஆண்கள், 39.05 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

அம்பத்தூர், திருவிகநகர், அண்ணநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

முழு கட்டுரையைப் படிக்க →