முகப்பு
தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி-யில் திமுக ஊழல்: முதல்வர் பழனிசாமி
தமிழ்நாடு

2ஜி அலைக்கற்றை வழக்கில் விரைவில் ஸ்டாலின் சிக்குவார்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி அலைக்கற்றையில் திமுக ஊழல் செய்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

2ஜி அலைக்கற்றை வழக்கில் விரைவில் ஸ்டாலின் சிக்குவார்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி அலைக்கற்றையில் திமுக ஊழல் செய்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி-யில் திமுக ஊழல்: முதல்வர் பழனிசாமி
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் முதல்வர்  பழனிசாமி செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி: 

தமிழகத்தில் இதர மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இதைக் குறைத்திடும் வகையில நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 11  தொகுதிகள் சேர்ந்த பொதுமக்கள் வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் சென்று வந்ததால் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தொற்று பாதிப்பினை குறைக்க அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 74 ஆயிரத்து 695 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை கரியகோயில் அணைக்கட்டுக்கு நீர் கிடைக்க கைக்கான்வளவு கால்வாய்   வெட்டம் ரூ.7 கோடி  மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இதன் காரணமாக சேலம் மாவட்டத்திலிருந்து 26 மாணவ மாணவியர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயில வாய்ப்பு உருவாகியுள்ளது. அகில இந்திய அளவில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக வேண்டுமென்றே திட்டமிட்டு நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவரது அறிக்கை வெளி வராத நாளே இல்லை. அவரை அறிக்கை நாயகன் என்றே சொல்லலாம். வீட்டிலேயே இருந்துகொண்டு வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி திமுக கொள்ளையடித்த கட்சி. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான். அவருடைய கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2 ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்துள்ளது. அவருடைய குடும்ப தொலைக்காட்சிக்கு 200 கோடி  ஊழலில் கைமாறி உள்ளது. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்.

அதிமுக ஆட்சியில் எங்கும் சிறு தவறு கூட நடைபெறாத வகையில் உலக வங்கி விதிமுறைப்படி ஆன்லைன் முறையில் டெண்டர் விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது உலக வங்கி தான். இதில் தவறு ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்படும் போது நூறு கோடிக்கு விடப்பட்டால் பணி முடிந்த பின்பு ரூ.172 கோடிக்கு தொகை வழங்கும் அளவிற்கு 72 சதவீதம் அதிகமான தொகையை சேர்த்து ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆதாரத்தை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். ஆட்சி கிடைக்கவில்லை என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். ஊழலில் திளைத்த ஸ்டாலின் அதிமுக ஆட்சி குறித்து கூற எந்த தகுதியும் அருகதையும் இல்லாதவர். 

திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட 230 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு கட்டட பணிகள் முடிவுற்ற போது 410 கோடிக்கு செலவு நடைபெற்றதாக பணத்தை வழங்கியுள்ளனர். மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை போட்டது ஸ்டாலின் தான் என்பதை மறுக்க முடியாது. அதை நான் தான் தடுத்து நிறுத்தி உள்ளேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம். திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் காணப்படவில்லை. நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 

சிறப்பான நிர்வாகம் காரணமாகவே அனைத்து துறைகளிலும் தமிழகம் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது.  பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரை ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்படும்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எடப்பாடி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி எடப்பாடியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சொல்லி இருக்கிறார். எடப்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அரசு பல தொழில்நுட்ப கல்லூரி, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மாதம் தவறாமல் எடப்பாடி தொகுதிக்கு வந்து நிறைவேற்றிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.

உடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறேன். இவை எல்லாம் கண்ணில் தெரியாத அளவிற்கு பச்சை பொய் கூறும் கனிமொழிக்கு பார்வையில் கோளாறு உள்ளது.

திமுக குடும்ப கட்சி வாரிசு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கார்ப்பரேட் கட்சியான திமுகவின் பெரிய தலைவர்கள் உள்ள நிலையில் இப்போது வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இந்த சட்டத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதனை தமிழக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் அரசியல் நடத்த எந்தவித காரணமும் கிடைக்காததால் ஸ்டாலின் அகில இந்திய அரசியல்வாதி போல இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் 23 லட்சம் மெட்ரிக் டன் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது வெளிச் சந்தையில் கேட்க ஆளில்லை. உற்பத்தி அதிகமாகும் போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தும். கடந்த 29 வருடங்களாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் எனக்கு இது நிச்சயமாக தெரியும். ஸ்டாலின் போன்றவர்களுக்கு தெரியாது.

போர் பஞ்சம் வறட்சி ஆகியவை ஏற்பட்டால் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள்  விவசாயிகள் பாதுகாக்கப் படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது விவசாயிகளை சந்தித்து கேட்ட போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் குறித்து யாரும் குறை சொல்லவில்லை ஹரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய விலை பொருட்களை விற்கும் போது 8 சதவீதம் அளவிற்கு வியாபாரிகளுக்கும் ஏஜென்ட் களுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை விற்க எந்தவித கட்டணமும் செலுத்தக்கூடாது. வரி வசூல் செய்யக்கூடாது என சொல்கிறது. மேலும் தங்களுடைய விளைபொருட்களை இந்தியா முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்துகிறது.


கூட்டணியில் இருந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதல்வர், கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. அவரவர் கட்சிக்கு ஏற்ப கொள்கைகளை கடைபிடிக்கின்றன. தமிழகத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார். 

ரஜினி புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கூறியது குறித்து கேட்டதற்கு, முழுமையாக தெரிந்து கொண்டு பேசுகிறேன் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →