நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் பேசும் மாவட்ட செயலாளர் ஆர்.டி அரங்கண்ணல். 
தமிழ்நாடு

நாமக்கல்லில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம்

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

DIN

நாமக்கல்: நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

இதனை தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தை எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.டி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில்  மக்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், கட்சியை கொண்டு சேர்ப்பது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் புனிதா, நகர பொறுப்பாளர்கள் ஆனந்த் பாலாஜி, பூஜா, அந்தோணி, ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT