மழை நீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதி 
தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கிய சீர்காழி நகர்ப் பகுதிகள்

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக

DIN

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. 

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, 20 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

இதனால் சீர்காழி நகரிலுள்ள பாலசுப்பிரமணியன் நகர், அடையார் நகர், எஸ் கே ஆர் நகர், பாப்பையா நகர், தி நகர் சின்னத்தம்பி நகர், கற்பகம் நகர், கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட நகரின் பேல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் 4 அடிக்கு மேல் சூழ்ந்துள்ளது.

இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT