மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 102.50 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,116 கன அடியிலிருந்து 5,976 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.13 டி.எம்.சி. யாக இருந்தது.