காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னை: மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மதியம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இது வலுவிழந்து தொடா்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.