கோப்புப்படம் 
தமிழ்நாடு

காவலர் எழுத்துத் தேர்வு தொடங்கியது: 5.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காலியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட, மாநகர ஆயுதப்படை, சிறைத்துறை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில் காவலர்கள் நிரப்பப்பட உளளனர். 

இதற்காக தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 5.50 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 35 மையங்களில் 29,981 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT