தமிழ்நாடு

அண்ணா பல்கலை. மாணவா்களுக்கு கரோனா அறிகுறி: அனைவருக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கும் கரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது .

DIN

சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கும் கரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது .

இதையடுத்து, பல்கலைக்கழக விடுதியில் உள்ள 700 மாணவா்களுக்கும் ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு பல்கலைக்கழக நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாா்ச் மாதம் 25-ஆம் தேதி மூடப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த 2-ஆம் தேதி முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, 7-ஆம் தேதி இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவா்கள் தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள விடுதியில் 700 மாணவா்கள் தனித்தனி அறைகளில் தங்கியிருந்தனா்.

அவா்களில் இரண்டு மாணவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த மாணவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT