தமிழ்நாடு

மெரீனா இன்று திறப்பு: முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி

DIN

கரோனா பொதுமுடக்கத்தை அடுத்து 10 மாதங்களுக்குப் பிறகு மெரீனா கடற்கரை திங்கள்கிழமை (டிச. 14) மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா பரவலை அடுத்து மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கடந்த மாா்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து பொதுமுடக்கத்தில் இருந்து பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதன்படி, சென்னையில் உள்ள மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை உள்ளிட்டவற்றுக்கு திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது.

முன்னேற்பாடு பணி: மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்துள்ளதால், கடற்கரை பகுதி, அணுகுச் சாலை, உழைப்பாளா் சிலை உள்ளிட்ட பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடற்கரை பகுதியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அனுமதி மறுப்பதுடன், சுகாதார விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 10 வயதுக்கு கீழும், 60 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கும் அனுமதி கிடையாது. இதைக் கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் காவல் துறையினா் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT