முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரை சரணாலயத்தில் மற்றொரு அரிய வகை பறவை அமூர் பால்கன்

நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சைபீரியா வழியாக வலசை போகும் அரிய வகை பறவையான அமூர் பால்கன் பறவை காணப்படுவது தெரிய வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோடியக்கரையில் காணப்படும் அமுர் பால்கன் பறவை.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சைபீரியா வழியாக வலசை போகும் அரிய வகை பறவையான அமூர் பால்கன் பறவை காணப்படுவது தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாள்களில் இங்கு அரிதாக காணப்பட்ட இமாலயன் கிருபான் கழுகை தொடர்ந்து மற்றுமொரு அரிய பறவை இனமான அமூர் பால்கன் இருப்பது தெரிய வந்துள்ளது.

கோடியக்கரை சரணாலயப் பகுதிக்கு வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் ஆண்டுதோறும் 247 பறவை இனங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வதாக ஆய்வுகளின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சரணாலயத்துக்கு புதிய வரவாக இமயமலை பகுதியில் காணப்படும் இமாலயன் கிரிபான் எனப்படும் அரிய வகை கழுகு ஒன்று கடந்த சில நாள்களாக காணப்படுகிறது. 

கோடியக்கரையில் காணப்படும் அமுர் பால்கன் பறவை.

இந்த நிலையில், மற்றுமொரு அரிய இனப் பறவையான அமூர் பால்கன் எனப்படும் அழுர் வல்லூறு இங்கு வந்திருப்பதை மும்பை இயற்கை வரலாற்றுக் கழக பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் இணை இயக்குநர் டாக்டர் பாலசந்திரன் கூறியது: வடகிழக்கு ரஷியா, சைனாவில் காணப்படும் இவ்வினம், சைபீரியா வழியாக வட இந்தியா பகுதிக்கு வலசை வரும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகலாந்தில் அதித எண்ணிக்கையில் காணப்பட்டது. இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்லும்.

தென் மாநிலங்களுக்கு வருவது அரிதானது, தற்போது கோடியக்கரையில் காணப்படுகிறது. குயில் வடிவில் காணப்படும் இந்த பறவை இரையை வேட்டையாடி சாப்பிடும்.

அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்களை தொடர்ந்து ஏற்படும் தொடர் மழையின் காரணமாக நேர்ந்த மாறுபாடுகள், அரிய வகை பறவைகள் வருகைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →