வியாழன் அன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால், வெள்ளரிவெள்ளி சாலையில் தேங்கிய மழைநீர். 
தமிழ்நாடு

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எடப்பாடி சுற்றுவட்டராப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

DIN

எடப்பாடி:  எடப்பாடி சுற்றுவட்டராப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

கடந்த இரு தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. 

இதனால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கிவரும் உழவர் சந்தை, காலை நேர சிறப்பங்காடி, ராஜாஜி பூங்கா காய்கறி சந்தை, பஜார்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. 
இப்பகுதியில் மழையால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. மேலும் அதிகாலை நேரத்தில் பெய்த  தொடர்மழையால் பால், காய்கறிகள், செய்திதாள் விநியோகம் பாதிப்பிற்குள்ளானது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். 

காலை நேரத்தில் பெய்த தொடர் கனமழையால், பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர்.

வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மிதமான மழையால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. 

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை தொடங்கி பெய்துவரும் தொடர்மழையால், இப்பகுதி மகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. 

வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால், வெள்ளரிவெள்ளி சாலையில் தேங்கிய மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT