முகப்பு
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: திருநாவுக்கரசர் கண்டனம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகிர்:

சென்னை: இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியில் பாஜக அரசு வந்ததிலிருந்து தமிழக கடலோரப் பகுதியில் வாழும் மீனவ பெருமக்களின் வாழ்வு பெருத்த சங்கடங்களுக்கும் சிரமங்களும் உள்ளாகியுள்ளது இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது கடத்திச் செல்வதும் சிறையில் அடைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.

நேற்று கூட அறந்தாங்கி தொகுதி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட இராமேஸ்வரம் தொடங்கி கடலோரப் பகுதியில் வாழும் சுமார் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வாடுகின்றனர். அவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

இவர்களை மீட்டு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மீனவர்களின் துயர்துடைக்க அவர்களின் வாழ்வாதாரத்தை முறைப்படுத்த சரிப்படுத்த மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.  

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →