முகப்பு
தமிழ்நாடு

புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

மன்னார் வளைகுடா பகுதியில் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் போன்ற நிவாரண பொருள்கள் பேடு தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
பகிர்:


மன்னார் வளைகுடா பகுதிக்கு உட்பட்ட பகுதியில் புரெவி புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக வீடுகள் இடிந்து தொழில் முடங்கி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் போன்ற நிவாரண பொருள்கள் பேடு தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

கடலாடி மற்றும் திருப்புல்லாணி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பேடு, சில்ரன் பிலிவ் மற்றும் ஃப்ரிடம் பண்டு பணி செய்யும் கிராமங்களில் புரெவி புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த திட்டக் குழந்தைகளின் குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், தலித் குடும்பங்கள், பனைமரத் தொழிலாளர்களின் குடும்பங்கள், பஞ்சாலை பணிக்குச் செல்லும் வளரிளம் பெண்களின் குடும்பங்கள், வீடுகளை முற்றிலும் இழந்த குடும்பங்கள் மற்றும் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை ஆகியவை கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களின் வழியாக பேடு  மற்றும் சில்ரன் பிலிவ் நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பேடு நிறுவன திட்ட இயக்குனர் மன்னர் மன்னன், திட்ட மேலாளர் பவுன்ராஜ்,  திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவ் ஆனந்த், திட்ட மேலாளர் வித்யா மற்றும் களப்பணியாளர்கள் ராம்கி, முனியராஜ், அபிராமி, தேவி, நாகரத்தினம், பெரியசாமி, ராஜேஸ்வரி  பௌலின், ஜோதி, மற்றும் அன்னதாய் ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →