முகப்பு
தமிழ்நாடு

சிப்காட் தொழில் பூங்காக்களில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள்

தமிழகத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் தொழில் பூங்காக்களுடன் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) செயல்பட்டு வருகிறது. தொழில் பூங்காக்களை பசுமையாக்கும் முயற்சியின் அங்கமாக, ரூ.10 கோடி மதிப்பில் 19 தொழிற் பூங்காக்களில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

செய்யாறு, ராணிப்பேட்டை, கடலூா், ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், நிலக்கோட்டை, சிறுசேரி, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பூங்காக்களில் வேம்பு, புளிபுங்கன், மருது, நீா்மருது, பூவரசு, ஆல், நாவல், ஐம்புநாவல், கொய்யா, மா, தான்றி, மரவல்லி, கொடுக்காபுளி, சொா்கம், மகாகனி, இலுப்பை, சில்வா் ஓக், அசோகா, இயல்வாகை, ஆயன், மந்தாரை, வசந்தமல்லி உட்பட 32 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பிற மரக்கன்றுகள் எதிா்வரும் ஜனவரிக்குள் நடப்படும் என்று தனது செய்தியில் குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →