முகப்பு
தமிழ்நாடு

பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பிரிட்டனிலிருந்து சென்னை வந்தவருக்கு கரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
பகிர்:

விராலிமலை: பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணியை தனிமைப்படுத்தி அவரின் மாதிரி மரபியல் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்தால் தான் அவர் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பது தெரிய வரும். அதுவரை பொதுமக்கள் பதட்டமும் பீதியும் அச்சமும் அடையத் தேவை இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராஜகிரியில் ஒளி மயமான வாழ்வு இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைக்க வந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

மேலும், கடந்த பத்து நாள்களில் லண்டனிலிருந்து தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்த ஆயிரத்து 88 பேர் கண்காணிக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேரை சோதனை செய்ததில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவரை தனிமைப்படுத்தி அவரின் மாதிரி மரபியல் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்தால் தான் அவர் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பது தெரிய வரும். அதுவரை பொதுமக்கள் பதட்டமும் பீதியும் அச்சமும் பட தேவை இல்லை. 

கடந்த 10 நாள்களில் தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு லண்டனிலிருந்து வந்த 1088 பேர் கண்காணிக்கப்பட்டு முழு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர், இ பாஸ் முறை மூலம் லண்டனிலிருந்து வந்தவர்களின் பட்டியல் எடுத்து கண்காணிக்கப்பட்டது, இனி வரக்கூடியவர்களையும் முழுமையாக கண்காணிக்க போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் லண்டனிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு வந்து அங்கிருந்து சாலை மார்கமாக தமிழகத்திற்கு வரக் கூடியவர்களும் அண்டை மாநில எல்லைப்பகுதிகளில் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பிரிட்டனிலிருந்து வந்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்காணிப்பில் உள்ளார். அவருடன் பயணித்த சக பயனாளிகள் கண்காணிப்பில் உள்ளார்களா என்பதை அறிந்தவுடன் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments