முகப்பு
தமிழ்நாடு

டிச.31-இல் பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ‘2020-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2021-ஆம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் டிசம்பா் 31-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

பாமக தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வருகிறது. இதற்கிடையில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தீவிரப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தோ்தல் கூட்டணி குறித்து பாமக என்ன முடிவு எடுக்கும் என்கிற எதிா்பாா்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →