முகப்பு
ஊழலிலும், உரிமையை விட்டுக் கொடுத்ததிலும் தான் தமிழக அரசு முதலிடம்: கமல்
தமிழ்நாடு

ஊழலிலும், உரிமையை விட்டுக் கொடுத்ததிலும் தான் தமிழக அரசு முதலிடம்: கமல்

ஊழலிலும், மாநில உரிமையை விட்டுக் கொடுத்ததிலும் தான் தமிழக அரசு முதலிடம் என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் கூறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஊழலிலும், உரிமையை விட்டுக் கொடுத்ததிலும் தான் தமிழக அரசு முதலிடம்: கமல்
பகிர்:

ஊழலிலும், மாநில உரிமையை விட்டுக் கொடுத்ததிலும் தான் தமிழக அரசு முதலிடம் என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: ஒரு குடும்பத்தையே ரூபாய் 80 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக வைக்கும் நிலையும், கந்துவட்டி கொடுமையும், மணல் கொள்ளையும் இங்கே நிகழ்கிறது.

இந்த நிலைமை வெகுநாள் நீடிக்காது. நாட்டை வெள்ளையர்களே ஆண்டு இருக்கலாம் எனச் சொல்பவர்கள் பேச்சு உண்மை என்ற நிலைமை இப்போது உள்ள கொள்ளையர்களால் வந்துள்ளது. வெள்ளையர்கள் போய் கொள்ளையர்களிடம் நாடு சிக்கியுள்ளது. எது கிடைத்தாலும் வாரிச் சுருட்டிக் கொள்ளும் நிலைமை உள்ளது.

தென்பெண்ணை நமது சொத்து, அது போனால் நம் வாழ்வாதாரம் பாழாகும். பழமை வாய்ந்த கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உங்களை பாதிக்கும் விஷயங்களை போக்குவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். எனக்குப் பின் இந்த தலைவர்கள் உங்களை சந்திப்பார்கள்.

உங்கள் குறைகளை தீர்த்து விட்டு கைத்தட்டல்களை நாங்கள் பெறுவோம். தமிழகம் சிறந்த மாநிலம் என விருது பெற்றதாக சொல்கிறார்கள். ஊழலிலும் மாநில உரிமையை விட்டுக்கொடுத்ததிலும் முதலிடம் என்று நான் உங்களுக்கு விருது அளிக்கிறேன்.

என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர், எனது வெள்ளை அறிக்கையில் ஒன்றுமே இருக்காது.  வருமான வரித்துறை பரிசளிப்பு விழாவிற்கு என்னை அழைத்தது நீங்கள் கேட்கும் வெள்ளையறிக்கை சான்று. எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன, இதை காப்பி அடிப்பார்கள் என்பதால் சரியான நேரத்தில் தற்போது வெளியிடுகிறோம். இனி வாரா வாரம் எங்களது திட்டங்கள் அறிவிக்கப்படும்.

பெட்ரோல் ரூ.34க்கு வாங்கி, 83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இந்த பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை என்ன? இப்போது விலை என்ன? பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றினாலே என்ன அறிவிப்பு வெளியிடுவாரோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

இவர்களையெல்லாம் அகற்றுவதற்கு நீங்கள் எங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
 
முழு கட்டுரையைப் படிக்க →