தமிழ்நாடு

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் புரட்சி: முதல்வர் பெருமிதம்

DIN

சங்கரன்கோவில்: தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்திருக்கிறது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி இல்ல விழாவில் முதல்வர் பங்கேற்று பேசியதாவது:
கழகம் என்றால் குடும்பம். இந்தக் குடும்ப நிகழ்ச்சியில் நாம் பங்குபெறுவதை மகிழ்ச்சியாக பார்க்கின்றோம். மனமார உளமார அந்தக் குழந்தைகளை வாழ்த்துகிறேன். ஜெயலலிதா காலத்திலேயே ஆதிதிராவிடர் நலத்துறை பொறுப்பை சிறந்த முறையில் நிர்வாகம் செய்தவர் அமைச்சர் ராஜலட்சுமி . கழகம் என்று சொன்னாலே எம்ஜிஆர், ஜெயலலிதா தான் நம் மனதிலே தோன்றுவார்கள். இன்றைக்கு கழகமும் குடும்பமும் ஒன்றாக பிணைந்து நாட்டு மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக நாம் இருக்கின்றோம்.
ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கல்வித் தரம் மற்றும் கிராமப்புற அனைத்து மக்களின் பொருளாதார உயர்வுக்கு அதிமுக அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புற மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கியது அதிமுக அரசு. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்ற 313 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறோம். நீர் மேலாண்மையில் புரட்சி, தொழிலில் புரட்சி, எல்லாத் துறைகளிலும் புரட்சி செய்திருக்கிறது அதிமுக அரசு என்றார் அவர். முன்னதாக, அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அவரது கணவர் வி.முருகன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT