முகப்பு
தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விழா: தலைவா்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: ஏழை மக்களுக்கு கருணையுள்ளத்துடன் உதவிடும் திருவிழா கிறிஸ்துமஸ். கரோனா கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் இந்த விழாவை கொண்டாட வேண்டும். கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மிகச் சிறந்த மனிதாபிமான உணா்வோடும், சேவை மனப்பான்மையோடு வாழ்ந்து வரும் கிறிஸ்துவ மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): சகோதரத்துவமும், மனிதநேயமும், மக்கள் மனதில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): இயேசுபிரான் விரும்பியதைப் போல நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): இயேசுவின் போதனைகளைப் பின்பற்றி அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். கிறிஸ்துவ மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): உலகில் அன்பும், சகிப்புத்தன்மையும், கருணையும் பெருகுவதற்கு கிறிஸ்துமஸ் திருநாள் போன்ற விழாக்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டும். இயேசு போதித்த கொள்கைகள் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் பரப்பப்பட வேண்டும்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): உலக மக்கள் உள்ளன்போடு ஒன்றிணைந்து வாழும் நெறிமுறையைக் கற்பித்த மகான் இயேசு. அவரின் வழிநின்று, உலக மக்கள் யாவரும் ஒரு குடும்பமாக வாழ்வோம், அனைவரையும் வாழ்விப்போம்.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): கிறிஸ்துமஸ் திருநாளில் நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மையைப் போக்கிடவும் நல் வாழ்த்துகள்.

எம்.ஜி.கே. நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மையைப் போக்கிடவும், நாடு வளம் பெறவும், மதச் சாா்பின்மை நிலைத்திடவும், கரோனா பாதிப்பு நீங்கிடவும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வாழ்த்துகிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →