கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், ராயப்பன்பட்டி பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் மிகப் பழமையான கிறிஸ்தவ ஆலயமான புனித பனிமய அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏசுநாதர் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
பங்கு தந்தை ஜோசப் தலைமையில் திருப்பலி, சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றது.
இரவு கொட்டும் பனியிலும் ராயப்பன்பட்டி பங்கை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் ஏராளமானோர் தேவாலயத்தின் வெளிப்பகுதியில் காத்திருந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இரவு 12 மணி ஆனதும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை முன்னிலையில் திருப்பலி ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. கம்பம் பங்கு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.