தமிழ்நாடு

ஊத்தங்கரை ஸ்ரீ வெங்கட்ரமணா கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஊத்தங்கரை ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN



ஊத்தங்கரை ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூ தேவி, சம்மேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை  4:30 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அபிசேக ஆராதனை, உற்சவமூர்த்திக்கு அலங்கார தீப ஆராதனை மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், விஷ்வசேனர், ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணன், கிருஷ்ணன், ஆண்டாள் ராமானுஜம், கருட ஆழ்வார் மூலவர்கள் ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ வெங்கட்ரமணா சுவாமிகளுக்கு பெண்கள் நெய் தீபம் ஏற்றினர். சிறப்பு பூஜையின் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிற கோஷத்தை எழுப்பினர். 

திருக்கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் லட்டுகள்,பிரசாதங்கள் வழங்கப்ட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT