திருவடி சூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் 
தமிழ்நாடு

திருவடிசூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருவடி சூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

DIN


செங்கல்பட்டு: திருவடி சூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி யையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவடி சூலத்தில் ஏழுமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள 108 திவ்ய தேசங்களில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சன்னதியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

ஸ்ரீ ரங்கநாதர் சொர்க்கவாசல் வழியாக மஹா தீபாராதனையுடன் காட்சியளித்தார். சொர்க்கவாசல் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அன்னதானமும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT